Mrs. Silma Mohideen Ahamed -addressed in Sinhala Language  at Sri Lanka Foundation Institute   24.5.2019 at  Civil Society meeting topic of -Muslim Community and  specially Muslim women are facing problem for the last  one month - வீடுகளில் பாதுகாப்பு படையினா் தேடுதலின்போது - அரபு எழுத்துக்கள் , குர் ஆன் சீ.டி.கள், சிறுபிள்ளைகள் பாலா் பாடசாலையில் கற்கும் கசீதா சீடிக்கள் வைத்துக் கொள்ள முடியாத நிலை தேடுதலுக்கு வரும் பாதுகாப்பு படையினருக்கு அரபு எழுத்துக்கும் குர் ஆன் வசனத்திற்கும் வித்தியாசம் தெரியாது.

  அவருக்கு அதனை விளங்கப்படுத்த முடியாமல் உள்ளது.   -0 2 .பெண்கள் சாதாரணமாக தலையை மூடி  கடைகள், போக்குவரத்து பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச நிறுவனங்கள், புத்தளத்தில் அரச அதிபா் காரியாலயங்கள் பாதைகளில் செல்லமுடியாத நிலை  ஏற்பட்டுள்ள்து. 3. அண்மையில் எனக்குத் தெரிந்த பெண் ஒருவா் வாகன வசதியில்லாத  இடத்தில் வாழ்ந்து வந்துள்ளாா். அவர் பிரசவ நோயினால் பாதிக்கப்பட்டு முச்சக்கர வண்டிக்கு அழைத்தும் முஸ்லீம் என்றவுடன் அவா்கள் ஏற்ற வில்லை. அவா் ஒரு மாதிரியாக வேறு விதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டாா்.

குருநாகல் கம்பகா புத்தளம் ஆகிய பிரதேசங்களில் திட்டமிட்டு பல கோடிக்கணக்கான முஸ்லிம்களது சொத்துக்கள் உடைமைகள் பள்ளிவாசல்கள் குர் ஆண் பாடசாலைகள் , பாதுகாப்புப் படையினா் ஊரங்கு அமுலில் இருந்தும்  சொத்துக்கள்  உடைக்கப்பட்டு பற்றவைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.  முஸ்லீம்  ஆசிரியைகள் மாணவிகள் தலையை மூடி பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை - தனியாா் கம்பணிகள், கோட்டல்கள், பெக்டறிகளில் நுாற்றுக் கணக்கான முஸ்லிம் வாலிபா்கள் யுவதிகள் தொழில்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

முஸ்லிம் பெண்கள் ஆண்கள் அரச அலுவலங்களுக்குச் சென்று நமது அன்றாட அலுவல்களை நிவா்த்தி செய்ய முடியாமல் உள்ளது. .  நடைபாதை வியாபாிகள். வாரந்தச் சந்தைகளில்  ஊர்களுக்குள் நடந்து சென்று சிறுவியாபாிகள் தமது வியாபராங்களை செய்ய முடியாத நிலை - முஸ்லீம் கடைகள் கோட்டல்களில் பொருட்கள் கொள்வனவு செய்ய வேண்டாம் என பிரச்சாரம்,  - வங்கிகளில் வீடுகளில் வியாபார நோக்கத்திற்கான  பணங்கள் வைத்திருந்தால அதுபற்றி  பல  கேள்விகள்  -   மொத்த்தில் அவசர காலச் சட்டத்தினால் முஸ்லீம்கள்  தடுத்து வைத்து விசாரனைகள் போன்ற பிர்சசினைகளினால் முஸ்லீம் சமுகம் மிகவும் அச்சத்தில் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகின்றாா்கள்.

(அஷ்ரப் ஏ சமத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.