தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இன, மத பேதங்களை ஏற்படுத்துவதாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இத்தகைய காட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாமென்றும் அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். 

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் பேதங்களை ஏற்படுத்தி நாட்டின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைப்பதாகும். பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பது தொடர்பில் நாம் மிகைப்படுத்திப் பேசவில்லை. நடைமுறைக்கு சாத்தியமான பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

சிலர் அதிகார மோகம் காரணமாக போலியான தேசப்பற்றை சித்தரித்துக் காட்ட முனைகின்றனர். சில இனத்தவர்களின் சொத்துக்களை நிர்மூலமாக்குமாறு கூறுகின்றனர். நாட்டைச் சீர்குலைத்து, சமய மேம்பாட்டை முடக்குவது இவர்களின் நோக்கமாகும் என்றும் தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.