Siyane Live Radio Program

நேரலை 24/7 Air Streaming


Sponsored by: Kahatowita.live

இலங்கை முஸ்லிம் சமூகம் நாட்டின் முக்கிய நகரங்களில் செறிந்து வாழ்வதற்கான காரணம்


தவலம
நகர உருவாக்கம்
சனச்செறிவு

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமே

தற்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலை பூகோள அரசியல் போட்டாபோட்டியின் ஒரு அங்கமே. இதனை பல்வேறு பிராந்திய சர்வதேச வல்லாதிக்கங்கள், அதன் உள்நாட்டு முகவர்கள் , வெளிநாடு வாழ் உள்நாட்டு குறவர்கள் ,உள்நாட்டில் வாழும் வெளிநாட்டு குறவர்கள் எல்லோருமாய் சேர்ந்து திரைக்கதை வசனம் எழுதி நன்கு நெறிப்படுத்தப்படுத்தி வருகிறார்கள்.

அச்சு அசலாக இது இயற்கையாய் நடந்து போல சித்தரிக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் பாரிய மனிதகுலத்திற்கு எதிரான கொள்கைகள், பழக்கவழக்கங்கள், செயட்பாட்டுத்திட்டங்கள் பரவலாக இருப்பது போன்று உலகத்திற்கு காட்டுவதிலும் அவர்கள் வெற்றிகண்டுவிட்டார்கள்.ஆறுதல் அளிக்கும் விடயம் என்ன வெனில் அவ்வாறான எந்த பூச்சாண்டிதனமும் இலங்கை முஸ்லிம்களிடம் இல்லாமல் இருப்பதுதான் மேலும் அவ்வாறான விடயங்கள் சிறுமுளையவு தோன்றினாலும் முதலில் செருப்படி வாங்குவது இவற்றால் நொந்து நூடுல்ஸாக போயிருக்கும் சாதாரண முஸ்லிம் பொதுமக்களின் கையினால் தான்.

என்னதான் ஊதுகுழல்கள் மக்களின் செவிப்பறைகளை கிழித்துக்கொண்டு வேதம் ஊதினாலும் , சுற்றியுள்ள ஒரு சில கழிசடைகள் தான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறுக என்று நப்பாசையுடன் அலைந்தாலும் இலங்கை முஸ்லிம்கள் இந்த தேசத்திற்கு எதிரான தீவிரவாதற்கோ வன்முறைக்கோ ஆதரவளிக்க போவதில்லை. அந்த உசார்மடைமைத்தனம் எங்களிடம் இல்லை.

இந்த தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முஸ்லிம் சமூகம் எடுத்த பிரயத்தனங்களின் வலியை அவர்களே அறிவார்கள் சொந்த மனைவிமக்களை பிரிந்திருந்து ஊரினைபிரிந்திருந்து மன்னர் காலம் முதலில் இந்த நாட்டின் பொருளாதார அச்சாணி சுழல தவலம என்ற பாண்டப்போக்குவரத்து (Logistics method)முறையை உருவாக்கியவர் எமது மூதாதையர்.

 காலனித்துவ யுகத்தில் முஸ்லிம்களின் பரம வைரிகளான போர்த்துக்கேயர் கூட அவர்கள் எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியுற முஸ்லிம்களிடமே அவற்றை விட்டுவிட்டார்கள்  ஒல்லாந்தர் கூட அதிலே கைவைக்கவில்லை பிரித்தானியர் புகையிரதம், பெருந்தெருக்கள் வரும் இந்த நிலையே இருந்தது தவலம சென்ற வழித்தடங்களே பெருந்தெருக்களாக புகையிரதப்பாதைகளாக மாற்றமுற்றன அதனாலேயே அதன் நகரங்களில் மையப்புள்ளியில் இன்னும் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள்

தவலம முறைமையானது நாட்டுப்புற விவசாய கைத்தொழில் உற்பத்திகளை துறைமுகங்களுக்கும் உள்நாட்டு இயக்கத்திற்கு தேவையான மூலப்பொருட்களை துறைமுகங்கள் ஏனைய பகுதிகளில் இருந்தும் கொண்டுசேர்த்த உயிர்ப்பான சுற்றோட்டத்தொகுதியாக விளங்கியது.

அந்த தவலம தரித்து நின்ற இடங்களே இன்று காணப்படும் நகரங்கள் கண்டி- கொழுப்பு வழித்தடமாய் இருக்கட்டும்  இலங்கையின் எந்த பகுதியாய் இருக்கட்டும் கேகாலை குருநாகல் பதுல்லை,ரத்தினபுரி, மற்றும் அதனேடினைந்த சிறுநகரமாய் இருக்கட்டும் உள்நாட்டிலேயும் புத்தளம்,கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை  போன்ற கரையோர நகரமாய் ஆனாலும் நகரமத்தியில் முஸ்லிம்கள் செறிவாக இருப்பதன் காரணம் இதுதான்

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பல்வேறு காரணுங்களுக்காய் தமக்குள் அண்டிவாழ்வதாலும் வணிகத்தையே பிரதான தொழிலாக காலாகாலமாக தேர்ந்தெடுப்பதாலும் அவர்கள் வாழிடம் குறுகியது சனச்செறிவு மிக்கது மிகக்குறைந்த அளவு நிலவளமே அவர்களால் உபயோகிக்கப்படுகிறது ஆனால் அந்த நிலங்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதால் அது பேசுபொருளாக மாறியுள்ளது இதுவே உண்மை அவர்கள் இதை ஆக்கரமிக்கவில்லை மாறாக உருவாக்கியதே அவர்கள்தான்.

உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 25.6% மாக காணப்படும் முஸ்லிம்கள்களுக்கு வெறும் 1.35% காணிவளமே உள்ளது எனினும் அவர்களே மாவட்ட பொருளாதாரத்தில் அதிகளவு பங்களிப்பு செய்கிறார்கள்.
இதுவும் ஒரு முக்கிய பேசுபொருளாக இன்று மாறியுள்ளது. ஒரு சமூகத்தின் திறனை அழிக்க நினைக்கும் கையறுநிலைக்கு துர்ப்பாக்கியமாக எமது நாடு தள்ளப்பட்டிருக்கிறது.

இந்த உண்மையை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
தனது சொந்த முயற்சியில் நாட்டையும் முன்னேற்றி தானும் முன்னேறிய சமூகம் முஸ்லிம் சமூகம். ஒரு வணிக சமூகம் தனது வாடிக்கையாளர்கள் வளமாக இருக்க வேண்டும் என்றே பிராத்தனை செய்யும், வாடிக்கையாளர்கள் நலன் எப்போதும் அவர்களுக்கு முக்கியமானது எந்தவெரு வாடிக்கையாளரையும் இழக்க பிரச்சினைக்கு உள்ளாக்க அது நினைக்காது இதுவே அடிப்படை உளவியல்.

எனவே இனத்தை அழித்தல் மலட்டுமருந்து போட்டுக்கொடுத்தல் போன்ற பிரச்சாரங்கள் உண்மையில் எந்தவித அடிப்படையோ அடிப்படை அறிவோ அற்றவை.


A leopard doesn't change its spots.

ஆக்கம்:

Dr Mohamed Ali Yaseer Arafath
Share on Whatsapp

About Rihmy Hakeem

0 கருத்துகள்:

கருத்துரையிடுக