இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு அத்துரலிய ரத்ன தேரர் பெரிதாக செய்த உதவியொன்று இல்லையென பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அத்துரலிய ரத்ன தேரர் ஒரு காலத்தில் ஒரு பக்கத்தில் இருப்பார். இன்னுமொரு காலத்தில் அடுத்த பக்கத்துக்கு பாய்வார். தேரர் பாயும் வேலையை மட்டும்தான் செய்கின்றார். தேரர் எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறாத போது இவ்வாறு செய்கின்றார். மத வழிபாடுகளில் ஈடுபடாமல் இருந்துவிட்டு, தேரர் சொல்லும் விடயங்களை ஏற்க நாம் தயாரில்லை.
அரசாங்கத்துக்கு அதிகாரத்துக்கு வருவதற்கு இதுபோன்றவர்களின் உதவிகள் தேவையில்லை. நாட்டு மக்களே தமது உரிமையை பிரயோகித்துள்ளனர். மக்களின் ஆதரவு இன்னும் எங்களுக்கு இருக்கின்றது எனவும் பிரதி அமைச்சர் இன்றைய தேசிய நாளிதழொன்றுக்கு கூறியுள்ளார்.  
(DAILY CEYLON)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.