சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்


இனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும்  மற்றுமொரு நடவடிக்கை.

முஸ்லிம்கள் பொதுச்சந்தையில் வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பதற்கான வெண்ணப்புவ பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தல்.

நான் நினைக்கிறேன் இதுதான் முதலாவது உத்தியோகபூர்வ ஆவணமும் கூட.

திரை மறைவில் இடம்பெற்ற விடயங்களை இப்போது பகிரங்கமாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

வடமேல் மாகாண ஆளுனரின் கவனத்திற்கு இது உடனடியாக கொண்டுசெல்லப்படவுள்ளது.

சட்டரீதியாக இதனை முகங்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை புத்தள முஸ்லிம் சட்டத்தரணிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

(ஏ.எல்.தவம்)
Share:

1 comment:

  1. நல்ல முயற்சி!

    சட்டரிதியாக தீர்வு காண முயல்வதே சரியானதும், அதிகாரபூர்வமானதும், கௌரவமானதும், நிலைத்து நிற்கக் கூடியதும், எதிர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையை உருவாக்குவதும். இன் ஷா அல்லாஹ் வெற்றியைத் தருவது அவனே !

    ReplyDelete