வரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்

சற்று முன்.......

-அமைச்சர்.மனோ கணேசன்...!!


இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்.  இன்று, குறுகிய நோக்கில் பேரினவாதிகளுடன் நம்மில் எவரும் கை கோர்த்தால், அது தவறான முன்னுதாரணமாக மாறி அனைத்து சிறுபான்மை மக்களையும் ஆபத்தில் போடும்.

என் மனதை நோகச்செய்யும் அளவுக்கு, என்னை மிகவும் கேவலமாக முஸ்லிம் இனவாதிகள் சில வாரங்களுக்கு முன்கூட திட்டினார்கள். அதற்காக முஸ்லிம் மக்களுடன் நான் கோபிக்க முடியுமா?

அப்படியே, 2005/2006/2007/2008 ம் ஆண்டுகளில் வெள்ளை வான் கடத்தல், படுகொலை, கப்பம் ஆகியவற்றுக்கு எதிராக நானும், ரவிராஜும் போராடியபோது என்னை சிங்கள இனவாதிகள் மோசமாக திட்டினார்கள். ரவியை கொன்றார்கள். என்னை கொலை செய்ய முயன்றார்கள். அதற்காக சிங்கள மக்களுடன் நான் கோபிக்க முடியுமா?

புலம் பெயர்ந்து வாழும் ஒரு மனநோயாளி தமிழன், என்னை வடக்கத்தியான் என்று சொல்லி, இறந்து போன என் தாயை விபச்சாரி என்றும் கூறி காணொளி வெளியிடுகிறான். அதற்காக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடன் நான் கோபிக்க முடியுமா?

நான் எதற்கும் அசைய மாட்டேன். நிதானமுள்ள எனக்கு வரலாறு வழிகாட்டி, மனசாட்சி நீதிபதி. இது ஜனநாயக நாடு. தேர்தல்களில் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள். வென்றால், பாராளுமன்றம். இல்லாவிட்டால், வீடு! அதற்காக என் மனசாட்சிக்கு விரோதமாக என்னால் நடக்க முடியாது.
Share:

No comments:

Post a Comment