திஹாரிய அல் அஸ்ஹரின் பாடசாலைக் கீதம் புதிய வடிவில் தயாரிக்கப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது


அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பாடசாலை கீதம் புதிய வடிவில் உருவாக்கப்பட்டு இன்று ஜூன் மாதம் 13ஆம் திகதி அன்று பாடசாலைக்குக் கையளிக்கப்பட்டது.

இந்த பாடலை 98 வகுப்புத் தோழன் மஸாஹிர் மஸ்தூக் தயாரித்திருந்தார்.

எமது பாடசாலை கீதம் எமது பாடசாலையின் முன்னால் அதிபர் மர்ஹூம் நயீம் ஷரிப்தீன் அவர்களால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உணர்வுபூர்வமாக இடம் பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மர்ஹூம் நயீம் ஷரிப்தீன் அதிபரது துனைவியார் பரீதா ஆசிரியை அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக ஹரூபா ஆசிரியை மற்றும் மரீனா ஆசிரியை, பாடசாலையின் அதிபர் அஸ்மிர் ஆசியரியர் மற்றும் பிரதி அதிபர் முபாரிஸ் ஆசிரியர் கலந்து சிறப்பித்தனர்.

அத்தோடு பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தினர்.

இந்த முயற்சியில் கைகோர்துக்கொண்ட 98 வகுப்புத் தோழர்கள் அனைவருக்கும் நன்றிகள்.Thanks - fb of 98 Batch
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here