கஞ்சிப் பான இம்ரானை தொடர்ந்தும் தடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி


டுபாயில் பாதாள உலக தலைவன் மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட கஞ்சிப்பான இம்ரானை தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

குறித்த நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது சந்தேக நபரை தொடர்ந்தும் விசாரணை செய்ய வேண்டும் என கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தது. 

அதனடிப்படையில் குறித்த நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறும் அன்றைய தினம் மீண்டும் குறித்த நபரை நீதிமன்றத்திடம் அழைத்து வருமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(அத தெரண)
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Ads Here

பிரதான காணொளி

Ads Here

Ads Here