( மினுவாங்கொடை நிருபர் )

   இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக கம்பஹா மாவட்டத்திலிருந்து 1751892 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, கம்பஹா பிரதித் தேர்தல் ஆணையாளர் கே.ஜே.எப். மாதவ தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள 1724309 வாக்காளர்களை விடவும், 2018'ஆம் ஆண்டில் 27583 வாக்காளர்கள் மேலதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

   கம்பஹா மாவட்டத்தில் மஹர தேர்தல் தொகுதியிலேயே ஆகக்கூடுதலான வாக்காளர்களும், களனி தொகுதியில் மிகக் குறைந்த வாக்காளர்களும்  பதிவு செய்யப்பட்டுள்ளனர். மஹர தொகுதியில் 161630 வாக்காளர்களும், களனி தொகுதியில் 95290 வாக்காளர்களும்  பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

   மஹர தொகுதிக்கு அடுத்தபடியாக,  கம்பஹா 157350, கட்டான 155996, ஜா - எல 155657, மினுவாங்கொடை 142378, அத்தனகல்ல 141544, வத்தளை 132219, மீரிகம 132219, பியகம 131264 தொம்பே 122912, திவுலப்பிட்டிய 114107, நீர்கொழும்பு 111326 வாக்காளர்கள் இம்முறை முறையே பதியப்பட்டுள்ளதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

   இதேவேளை, இலங்கையில் கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,  கம்பஹா மாவட்டத்தில்  1171 வாக்களிப்பு நிலையங்களும், கம்பஹா தொகுதியில் மாத்திரம் 107 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.