அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது குறித்த பிரேரணை ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் இன்று ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதேபோல் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதற்கும் இந்த மாநாட்டில் இணக்கம் காணப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த யோசனையை முன்வைக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அப்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவின் தாயாரும் முன்னாள் ஜனாதிபதியின் மனைவியுமான ஏமா பிரேமதாசவை அழைத்துக்கொண்டு மேடைக்கு வருகை தந்தார்.

அந்த வேளையில் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தார்.

அதன்பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் மேலும் 5 யோசனைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்டன.

குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவையும் ஏகமனதாக அங்கிரிக்கப்பட்டன.

2019 ஆம் ஆண்டு செப்டேம்பர் 26 ஆம் திகதி கட்சி செயற்குழு மூன்று பிரதான யோசனைகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அதிகார பகிர்வு, தேர்தல் முறைமையை மாற்றியமைத்தலின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு வரைபை முன்னோக்கி கொண்டு செல்லல் ஆகியன அவற்றுள் அடங்கும்.

மேலும் கட்சி யாப்பின் 08.01 (அ) சரத்துக்கமைய 2019 ஜனவரி 24 ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க கட்சியின் தலைவராக செயற்குழுவினால் தெரிவு செய்யப்பட்டமையும் இந்த மாநாட்டில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அத்துடன் பாராளுமன்ற ஜனாநாயகத்தை பாதுகாக்க முன்னின்று செயற்பட்ட சபாநாயகர் கருஜயசூரியவை கௌரவப்படுத்துவது உள்ளிட்ட ஆறு யோசனைகள் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

2019 ஆம் ஆண்டு செப்டேம்பர் 26 ஆம் திகதி கட்சி செயற்குழு மூன்று பிரதான யோசனைகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அதிகார பகிர்வு, தேர்தல் முறைமையை மாற்றியமைத்தலின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல் மற்றும் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு வரைபை முன்னோக்கி கொண்டு செல்லல் ஆகியன அவற்றுள் அடங்கும்.

இந்த யோசனைகள் இன்றைய கட்சி மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை விசேட அம்சமாகும். நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல தகுதியான ஒருவரை தெரிவு செய்துள்ளதாக கூறினார்.

எவவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கத்தை தேர்தல் வரை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த அவர், அதிகாரத்தை பிடித்துக்கொண்டால் அதனை கைவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.