ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் கட்சியையும் , நாட்டையும் பாதுகாத்துக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிப் பெறச் செய்யும் பயணத்தை தொடரவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

இன்று (10) முற்பகல் ஶ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் இரு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கடந்த காலங்களில் கட்சியை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்புக்களை மேற்கொள்ள வேண்டியதாய் இருந்ததாக தெரிவித்தார்.

அதேபோல், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ என்பவர், நாட்டின் புத்திஜீவிகளுக்கு மத்தியில் உருவான நாட்டுப்பற்றுக் கொண்ட தலைவர் என அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் கட்சியையும் , நாட்டையும் பாதுகாத்துக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிப் பெறச் செய்யும் பயணத்தை தொடரவுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று கைச்சாதன ஒப்பந்தங்களின் ஊடாக 65 இலட்சம் வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளதாக என அவர் மேலும் தெரிவித்தார்.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.