( ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுக்கு மத
அடிப்படைவாத முரண்பாடுகளும் காரணம் என இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு அறிக்கை இன்று (23) நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டது.
தெரிவுக்குழுவின் பிரதித் தலைவர் ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவுக்குழு அறிக்கையை சபைப்படுத்தினார்.

குறித்த அறிக்கையில், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் , சட்டமா அதிபர் திணைக்களம் கடமைகளைத் தவறவிட்டுள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளினுள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர், தேசிய புலனாய்வு பிரதானி மற்றும் இராணுவப் புலனாய்வு பணியகத்தினர் ஆகியோர் தமது பொறுப்புகளை தவற விட்டுள்ளமை,
ஜனாதிபதி பல சமயங்களில் தலைத்துவம் கொடுப்பதற்கு தவறியுள்ளார் .

அத்துடன் அவசர கூட்டங்களிலிருந்து முக்கிய தனி நபர்களை வெளியேற்றுதல், தேவைக்கேற்ற விதத்தில் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களை நடத்துதல் உட்பட அரசாங்கம் மற்றும் முறைமைகளை மிகவும் கீழ்நிலைப்படுத்தியுள்ளமை,
பிரதம அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட இன்னும் பலர் தமது கடமைகளில் தவறியமை உட்பட பல விடயங்கள் அந்த அறிக்கையில் நிரல் படுத்தப்பட்டுள்ளன.

அறிக்கையை Download செய்யhttps://www.parliament.lk/uploads/comreports/sc-april-attacks-report-ta.pdf

Metro

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.