ஜம் இய்யத்துல் உலமா மீலாதுன் நபி கட்டுரைப் போட்டிகளுக்காக விண்ணப்பங்களைக் கோருகிறது

( மினுவாங்கொடை நிருபர் )

   இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉனில் அவ்வல் மாதத்தை முன்னிட்டு இரண்டு பிரிவுகள் உள்ளடங்கியதான கட்டுரைப் போட்டிகளை நடாத்துவதற்கு, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா தீர்மானித்துள்ளது.

பிரிவு 01 -
ஆய்வுக் கட்டுரை,    தலைப்பு -      "பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்".
 சொற்கள் -
 4500 – 5000 க்கு உட்பட்டதாக இருத்தல்.
 மொழிகள் - தமிழ் மற்றும் சிங்களம். 
விண்ணப்பங்கள் -
பி.ஏ. (B.A.), 
எம்.ஏ. (M.A.) முடித்தவர்கள் அல்லது ஆசிரியர் பயிலுனர் கல்லூரியில் (College of Education) பயின்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

   பரிசுகள் -  முதலாமிடம் -  100,000 ரூபா,  இரண்டாமிடம் - 75,000 ரூபா,  மூன்றாமிடம் -  50,000 ரூபா,  மேலும், பங்குபற்றுபவர்களில் 20 பேர்களுக்கு ஆறுதல் பரிசுகள்  வழங்கப்படும்.

   பிரிவு - 02  தலைப்பு - 
 01 - "நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பன்முக ஆளுமை", 
02 - "நற்குண சீலர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள்",
03 - "மனித நேயம் போதித்த மாநபி முஹம்மத் (ஸல்) அவர்கள்". 
இத்தலைப்புக்களில் ஏதாவது ஒன்றை மாத்திரம் எழுத முடியும்.  சொற்கள் -
 1500 - 2000 க்கு உட்பட்டதாக இருத்தல்.
 மொழிகள் -
தமிழ் மற்றும் சிங்களம்.
விண்ணப்பங்கள் -
 உயர்தரப் பரீட்சையில் தோற்றியவர்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
பரிசுகள் -
முதலாமிடம் - 75,000 ரூபா, இரண்டாமிடம் -  50,000 ரூபா,  மூன்றாமிடம் - 30,000 ரூபா,  மேலும், பங்குபற்றுபவர்களில் 20 பேர்களுக்கு ஆறுதல் பரிசுகள்  வழங்கப்படும்.

 பொது நிபந்தனைகள் - கட்டுரைகள் சுய ஆக்கமாக இருத்தல்  வேண்டும்.  இதற்கு முன் எழுதப்பட்ட ஆக்கமாக இருக்கக்கூடாது.  உசார்த்துணைகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். முஸ்லிம்கள் மாத்திரமன்றி,  முஸ்லிமல்லாத விருப்பமுள்ளவர்கள் எவரும் இப்போட்டிகளில்  பங்குபற்றலாம். பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன கட்டுரையுடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும்.  கட்டுரை எழுத விருப்பமுள்ளவர்கள் 10.12.2019 ஆம் திகதிற்கு முன்பாக,  ஜம் இய்யாவின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.

கட்டுரைகள், 31.01.2020 திகதிக்கு முன்னதாக, பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில், ‘கட்டுரைப் போட்டி - 2019’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும். ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியும்.

   மேலதிக விபரங்களுக்கு, வார நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5  மணி வரை 011-7490490 அல்லது 077-3185353 ஆகிய  தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு,  போட்டியாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

   அனுப்ப வேண்டிய முகவரி: 
   அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா, 281, ஜயந்த வீரசேகர மாவத்தை,  கொழும்பு - 10

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.