விசேட தேவையுடையவர்கள் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசேட தேவையுடையோர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று (03) கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர், வாக்களிக்கும் போது விசேட தேவையுடையவர்களுக்கும் சம உரிமை வழங்கப்படவேண்டும்.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்ற குடிமக்கள் வாக்களிப்பதற்காக உதவியாளர் ஒருவரை வாக்குச் சாவடிக்கு அழைத்து வர முடியும்.

அதேபோல், நோயாளர்களுக்கு மற்றும் உடல் குறைபாடு உள்ளவர்கள் வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு சமூகமளிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.