அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆராய்வதற்காக திடீரென உட்புகும் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைத்து செயற்படுத்தியுள்ளார்.

இவ்வாறு திடீரென அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களில் உட்புகும் குழுவில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மட்டும் உயர்மட்ட அதிகாரிகளும் இடம்பெறுவார்கள்.

நீண்ட காலமாகக் கேட்பாரற்றுக்கிடக்கும் அரச நிறுவனங்களை மீண்டும் வினைத்திறனுடன் இயங்கவைக்கும் நோக்கத்துடன், ஜனாதிபதி இவ்வாறானதொரு குழுவை அமைத்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன் ஜனாதிபதி, நாரஹென்பிட்டிய பொருளாதார மத்திய நிலையம் உட்பட சில அரச நிறுவனங்களுக்கு இவ்வாறு சென்றுள்ளார். அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட அரிசியை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்துரையாடி கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கையெடுத்திருந்தார்.

அதேபோன்று நில அளவையாளர் திணைக்களத்துக்கு ஜனாதிபதி திடீரெனச் சென்றுள்ளார்.
அதேபோன்று சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகத்திற்கும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கும், காலி முகத்திடல் பாதுகாப்பு அமைச்சு வளாகத்திற்கும் திடீர் கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் திணைக்களத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பொறுப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இந்தத் திடீர் விஜயங்கள் மூலம் சேவை வினைத்திறனாவதுடன், குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய முடியும் என்பது அரசாங்கத்தின் கொள்கையாகவுள்ளது.

Source

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.