12.5% வெட்டுப்புள்ளி; இந்தியாவில் 13 கோடி முஸ்லிம்களுக்கு நடப்பதை விட மோசமான ஒடுக்கு முறைகளை இலங்கையில் உருவாக்கலாம்.........

✔️வெட்டுப்புள்ளி என்றால் என்ன? என்பதை இலகுவாக இப்படி சொல்லலாம்;
அளிக்கப்படுகின்ற வாக்குகளில்  குறித்த வீதத்திற்கு மேல் பெற்றால் மாத்திரமே - எந்தவொரு கட்சிக்கும் அல்லது குழுவிற்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற வரையறையே - வெட்டுப்புள்ளி என்பது.

✔️தற்போது வெட்டுப்புள்ளி 5% (1/20) ஆக இருக்கிறது

✔️இவ்வெட்டுப்புள்ளி 1988 வரை 12.5% (1/8) ஆக இருந்தது:-
1989 பாராளுமன்ற தேர்தல் வரைக்கும் - சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினரை பெறுவதில் இந்த 12.5% வெட்டுப்புள்ளி பெரும் தடையாக / சவாலாக இருந்தது. அதனால், பாராளுமன்றத்தில் 1989 வரும் வரையான காலப்பகுதியில் பெரும் கட்சிகளே உறுப்பினர்களை கொண்டிருந்தன.

✔️வெட்டுப்புள்ளி பிரயோகம் உதாரணத்தில்:-
👉🏿 5% எனின்;
100 வாக்குகள் அளிக்கப்பட்டால் இதில் 5 (5%)  வாக்குகளுக்கு மேலே எடுக்கும் கட்சிகளுக்கு / குழுக்களுக்கு - பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்கும்.
👉🏿12.5% எனின்;
100 வாக்குகள் அளிக்கப்பட்டால் இதில் 13 (12.5%)  வாக்குகளுக்கு  மேலே எடுக்காதுவிடின் எந்தக் கட்சிக்கோ / குழுவிற்கோ - பாராளுமன்ற உறுப்பினர் கிடைக்காது.
👉🏿அதாவது, இப்போதிருக்கும் 5% என்பதோடு - இன்னும் ஒன்றரை மடங்கு மேலதிக வாக்குகளை பெறாத கட்சிகளுக்கு - பாராளுமன்ற உறுப்பினரை பெற முடியாது.

✔️ 1988 ஆம் ஆண்டில் இவ்வெட்டுப்புள்ளி 5% மாக குறைக்கப்பட்டது:-
வெட்டுப்புள்ளி 12.5% மாக இருக்கும் வரைக்கும் சிறுகட்சிகளோ அல்லது சிறுபான்மை கட்சிகளோ பாராளுமன்ற தேர்தல்களில் கணிசமான உறுப்பினர்களை வென்றெடுக்கவோ - அரசியலில் நிலைத்திருக்கவோ முடியாது என்பதை உணர்ந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் வேண்டுகோளில் - முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் அவ்வெட்டுப்பள்ளியை 5% மாக குறைத்தார். அதனூடாக முஸ்லிம் சமூகம் கணிசமான பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடிந்தது.

இவ்வாறு 12.5% ஆக இருந்த வெட்டுப்புள்ளி 5% ஆக குறைக்கப்பட்ட பின்னர்தான் மலையக மக்கள் முன்னணி, ஜேவிபி மற்றும் ஹெல உறுமய போன்ற கட்சிகளால் கூட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடிந்தது. அதனால், ஆட்சி அதிகாரத்தில் சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளின் வகிபாகம் தவிர்க்க முடியாமல் போனது.

1989 வரும் வரையிலான காலப்பகுதியில் இருந்த - பொரும்பான்மை கட்சிகளின் விருப்பை மட்டும் அடைந்துகொள்ளும் பாராளுமன்ற முறைமை இல்லாமலாகி - சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளின் பங்குபற்றுதலுடனான ஜனநாயக முறைமை தோற்றம் பெற்றது. பெரும்பான்மை ஆதிக்கவாதம் இல்லாமலாக்கப்பட்டு சிறுபான்மையினரின் அபிலாசைகளும் கருத்திற்கொள்ளப்படும் சூழல் உருவானது.

✔️விஜயதாச ராஜபக்சவினால் தற்போதுள்ள 5% யினை இல்லாமலாக்கி மீண்டும் 12.5% மாக  மாற்ற பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது:-
அதாவது,  சிறுபான்மையினரையும் சிறுகட்சியினரையும் பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவதை தடுத்து - பெரும்பான்மை கட்சிகள் (UNP, SLFP, SLPP) மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று - பெரும்பான்மை மேலாதிக்கத்தின் கீழ் மீண்டும் பாராளுமன்றத்தை கொண்டுவரும் முயற்சியாக இது அமைந்துள்ளது. 1989 க்கு முந்திய இருள் நிறைந்த காலத்திற்கு சிறுபான்மையினரையும் சிறுகட்சிகளையும் தள்ள எத்தனிக்கிறது.

✔️விஜயதாச ராஜபக்சதான் இவ்வாறு முயற்சிக்கிறாரா? என்று பார்த்தால்; இல்லை. நேற்றைய ஜனாதிபதியின் பாராளுமன்ற உரையும் - தேர்தல் முறையில் மாற்றம் வரப்போவதை கட்டியம் கூறி நிற்கின்றது.

எனவே, சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளை அழித்து - பெரும்பான்மை ஆதிக்கத்தின் கீழ் பாராளுமன்றத்தை கொண்டு வருவதனூடாக - சிறுபான்மையினரை தாங்கள் நினைத்த வண்ணம் அடிமைகளாக வாழ்வதற்கு வழி சமைக்க முயற்சிக்கும் - வெட்டுப்புள்ளியை 12.5% ஆக உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக - கட்சி பேதங்களுக்கப்பால் எதிர்ப்பினை பதிவு செய்ய சகலரும் தயாராக வேண்டும்.

✔️இவ்வாறு பெரும்பான்மை ஆதிக்கத்தின் கீழ் பாராளுமன்றத்தை கொண்டு வரும் முயற்சிகள் அவர்களுக்கு வெற்றியளித்தால் - தற்போது இந்தியாவில் 13 கோடி முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறதோ - அதை விடவும் மோசமான ஒடுக்கு முறைகளை இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களும் முகங்கொடுக்க நேரிடும்.

அல்லாஹ் நமது சமூகத்தை பாதுகாப்பானாக!

 - எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன் -

Thanks :- A.L.Thavam (Ex-MPC)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.