கொரோனா கிருமி தொற்றுவதற்கும் அறிகுறிகள் தென்படுவதற்கும் இடைப்பட்ட காலம் 5 நாள்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா கிருமி ஒருவருக்குத் தொற்றியதிலிருந்து சராசரியாக 5.2 நாள்களில் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். ஆனால் நோயாளிக்கு நோயாளி, அது வேறுபடலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
New England Journal of Medicine (NEJM) சஞ்சிகையில் சீன ஆய்வுக் குழு நேற்று இந்த தகவலை வெளியிட்டது.
கிருமித்தொற்றக் கூடிய அபாயத்தில் இருந்தோரை 14 நாள்கள் தொடர்ந்து மருத்துவக் கவனிப்பில் வைத்திருந்து அதனைக் கண்டறிந்ததாகக் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வுக்காக 10 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். உலக சுகாதார நிறுவனம் நோய் தொற்றுவதற்கும் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடைப்பட்ட காலம் 2-இலிருந்து 10 நாள்கள் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamil Mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.