வெளிநாட்டுக் கம்பனிக்கு காணிகளை விற்கும் ராஜபக்ஷ அரசாங்கம்!

அவர்களது 'நாட்டுப்பற்றின்' இன்னொரு வடிவம்.

இந்த நாட்டை சீரழித்த இரண்டு கட்சியினரும், எதிர்க்கட்சியில் இருக்கும்போது கதைப்பது ஒன்று. ஆட்சியில் இருக்கும்போது நடந்துகொள்வது அதற்கு நேரெதிராக. இதைத்தானே திரும்பத் திரும்ப அனுபவித்து வருகிறோம்.

தாங்கள் மட்டும்தான் நாட்டுப்பற்றுடையோர் என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் முரண்நகையான செயலுக்கு ஓர் அண்மைய உதாரணம் இது. இந்த அரசாங்கத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.

கொழும்பு நகரின் மைய இடத்தில் அமைந்துள்ள பேரே ஏரிக்கு (Beira Lake) அருகிலுள்ள மூன்று ஏக்கர் காணியை, வெளிநாட்டுக் கம்பனியொன்றுக்கு விற்பதற்கு ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது நாட்டின் காணிகளை எந்தவொரு வெளிநாட்டுக் கம்பனிக்கும் விற்க மாட்டோம் என்று உறுதி கூறியோர்தான் இவர்கள்.

ஷங்ரிலா ஹோட்டலுக்கும் பேரே ஏரிக்கும் இடையில் அமைந்துள்ள இந்தக் காணி, சிங்கப்பூர் கம்பனியொன்றுக்கு 43 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கைமாற்றப்படுகிறது.

இதனை விற்பது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரம் எந்தவொரு கேள்விப் பத்திர ஒழுங்குமுறையையும் (tender procedure)  பின்பற்றியிருக்கவில்லை. இனிமேல் எந்தவொரு கருத்திட்டமும் முறையான கேள்விப் பத்திர ஒழுங்குமுறையின்றி அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று, இதே ராஜபக்ஷதான் தேர்தலுக்கு முன் மக்களுக்கு உறுதியளித்திருந்தார்.

தகவல் உதவி: Red Power.

(சிராஜ் மசூர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.