நான்கு செயற்பாடுகளின் கீழ் இலங்கையை முஸ்லிம் ராச்சியமாக்குவதற்கான திட்டத்தை ஜம்மியத்துல் உலமா சபை நடைமுறைப்படுத்தியதாக தமக்கு தகவல் கிடைத்திருந்ததாக முன்னாள் நீதியரசர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்றைய தினம் சாட்சியமளித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் உள்ளனரா? என அரசாங்கத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள விஜேதாஸ ராஜபக்ஸ எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, முஜிபுர் ரஹ்மான், அசாத்சாலி போன்றோர் அடிப்படைவாதத்தை ஊக்குவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
2018 ஆம் ஆண்டில் மாவனெல்லையில் புத்தர்சிலை சேதமாக்கப்பட்டமை உள்ளிட்ட சில அடிப்படைவாத சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அழுத்தம் வழங்கினர் என விசாரணைகள் அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தெமட்டகொடையை சேர்ந்த இப்ராஹிம் குடும்பத்துடன் தொடர்பு உள்ளதை தான் அறிந்துள்ளதாகவும் விஜேதாஸ ராஜபக்ஸ ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜம்மியத்துல் உலமா சபை நான்கு செயற்பாடுகளின் ஊடாக இலங்கையை முஸ்லிம் ராஜ்சியமாக்குவதற்கு திட்டமிட்டு இருந்ததாக சம்பிரதாய முஸ்லிம் நண்பர்களின் ஊடாக தனக்கு அறிய கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஹலால் சான்றிதழ், பெண்களின் முகத்தை மறைத்தல் ஷரியா சட்டத்தை இந்த நாட்டின் நடைமுறையாக சட்டமாக்குல், அரபு மொழியை கற்பிப்பதன் ஊடாக இந்த நாட்டை முஸ்லிம் ராஜ்சியமாக்குவதற்கு தனக்கு தகவல் கிடைத்திருந்தததாக விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

இதன்போது கேள்வி எழுப்பிய ஆணைக்குழு, இதற்காக அரசியல் ரீதியான ஒத்துழைப்பை வழங்கியது யாரென வினவியது?
இதற்கு பதிலளித்துள்ள விஜேதாஸ ராஜபக்ஸ, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, றிஷாட் பதீயுதீன் போன்றோர் ஊடாக கிடைக்கும் மத்திய கிழக்கின் உதவிகள் மூலம் ஷரியா சட்டத்தை கற்பிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கூறியுள்ளார்.


Hiru News

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.