கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி, இத்தாலி நாட்டில் இதுவரை 10,023 பேர் உயிரிழந்துள்ளனரென உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (28) மாலை வரையிலும் இத்தாலியில் 92,472பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 10,023பேர் இவ்வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். 12,384பேர் இதுவரையிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உலகளாவிய ரீதியில் இன்று (28) இரவு 11 மணிவரை (இலங்கை நேரப்படி) வரை 650,729பேர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதுடன், 30,299பேர் பரிதாபமாக உயிரிழந்துமுள்ளனர்.
(Tamil Mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.