எம்.யூ.எம். சனூன், அசார்தீன் 
புத்தளம்- ஸாஹிரா தேசிய கல்லூரியில் அமைக்கப்பட்ட  கொரோனா சிகிச்சை மற்றும் கண்காணிப்பு மத்திய நிலையத்தில தனிமை படுத்தப்பட்டவர்களில் 10 பேருக்கு கொவிட் 19 பொசிட்டிவ் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
புத்தளம் நகரபிதா கே.ஏ. பாயிஸ் மற்றும் வைத்தியர்கள் இன்று இரவு 8.30 மணியளவில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 80 க்கும் மேற்பட்டவர்களில் 20 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே, 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
புத்தளம் கடையாங்குளம் பிரதேசத்தில் ஏற்கெனவே இனங்காணப்பட்டவருடன், தற்போது புத்தளத்தில்  மொத்தமாக 11 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
புத்தளம் நகர மக்கள் தற்போது ஆபத்தான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தெரிவித்த நகர பிதா சகல மக்களையும் சுய தனிமைக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.