கொரோனா வைரஸ் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஆய்வுக் கூடங்களை உருவாக்குவதல், வைரஸ் தொற்றியுள்ள நோயாளர்களை கண்டறிய மற்றும் அது சம்பந்தமாக கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் சுகாதார சேவைகளுக்காக அமெரிக்கா இலங்கைக்கு 26 மில்லியன் டொலர்களை அன்பளிப்பு செய்துள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 256 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 704 பேர் உயிரிழந்துள்ளனர்.

(தமிழ்வின்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.