இலங்கையில் தங்கியிருக்கும் 18 ஆயிரத்து 93 வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர்களில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை இலங்கை சுற்றுலாத் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, விமான நிலையத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத வௌிநாட்டு பயணிகள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 1912 என்ற அழைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையால் கோரப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வௌிவிவகார அமைச்சு மற்றும் தொடர்புடைய தூதரகங்களுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக தெரவிக்கப்படுகிறது.

நாட்டிற்கான விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள போதும் நாட்டில் இருந்து வௌியேறுவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிட்டாவுக்கு தினசரி விமானங்களை இயக்குகிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எந்வொரு நாட்டுக்கும் அவர்களின் குடிமக்களை திரும்பப்பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு பட்டய விமானங்களுக்கு இடமளிப்பதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.