(ஏ.கே.முஹம்மத்)

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காரணமாக அன்றாட வாழ்க்கை நிர்க்கதியாகியுள்ள சுமார் 250 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை எட்டியாந்தோட்டை அல்-ஹிக்மா ஜும்மா (25) பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் எமது பிரதேசத்தில் வசிக்கும் மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

 இதன் ஆரம்ப நிகழ்வில் எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கராகொடை கிராம சேவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க எட்டியாந்தோட்டை ஜனாஸா நலன்புரிச்சங்கம் மற்றும் ஊர் வாசிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.