கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மேலும் 4 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார். 

கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தில் ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் மூலம், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது. 

UPDATE :

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் 56 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்ட நிலையில் சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்வடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.