சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி 793 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் பதிவான ஆக கூடிய மரண எண்ணிக்கை இதுவாகும்.

இதுதொடர்பாக இத்தாலி பிரதமர் கியுஸ்பி காண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.