ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன், ஜானி உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘7 ஆம் அறிவு’. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. சீனாவில் இருந்து வரும் வில்லன் நாய் மூலமாக இந்தியாவில் கிருமியை பரப்ப திட்டமிடுகிறான். அதை எதிர்கொள்ள ஸ்ருதிஹாசன் பழங்காலத்து போதிதர்மன் என்ற துறவியை உயிர் பிழைக்க வைப்பார்.

அதாவது, வம்சா வழியில் வந்தவருக்கு போதிதர்மரின் திறன்களைக் கொடுத்து, போதி தர்மருக்கு இணையாக மாற்றுவார். . இது தான் ‘7-ம் அறிவு’ படத்தின் கதையாகும்.

தற்போது இந்தியாவில் கரோனா கிருமியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மீம்ஸ் உருவாக்குபவர்கள், ‘7ஆம் அறிவு’ படத்தின் காட்சிகளை வைத்தும், ஸ்ருதிஹாசன் கிண்டல் செய்யும் விதமாகவும் மீம்ஸ்களை உருவாக்கி, ஸ்ருதிஹாசன் சமூகவலைத்தளத்தைக் குறிப்பிட்டு கேள்வியையும் எழுப்பி வந்தனர். “போதி தர்மனை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்து எங்களை எல்லாம் காப்பாற்றுங்கள்” என்றும் அதில் தெரிவித்தார்கள்.

இதற்கு தொடக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்த ஸ்ருதிஹாசன், பின்னர் இது தொடர்பான மீம்ஸ்களும் கேள்விகளும் அதிகரிக்கவே தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பிரிவில், “நிறுத்துங்கள்.. ப்ளீஸ்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது தன்னைத் தானே தனிமைப்படுத்துக் கொண்டு, நண்பர்களுடன் காணொளி அழைப்பு மற்றும் இன்ஸ்டாகிராமில் உரையாடல் எனப் பொழுதைக் கழித்து வருவதாகவும் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.