கொழும்பில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் என அழைக்கப்படும் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் 13 ஆம் திகதியும், 20 ஆம் திகதியும் ஜும்ஆ தொழுகையும் பிரச்சங்கமும் நடைபெற்றதாகவும், இதனால் கோரோனா தொற்று ஏற்பட வாய்புள்ளதாகவும் அததெரண தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியிருந்தது.

இதுதொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகமானது, வியாழக்கிழமை 26 ஆம் திகதி அததெரண தலைமையகத்திற்கு நேரடியாக சென்று, விளக்கம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் பற்றிய தகவல்கள் பரவத்தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே அதாவது மார்ச் 13 ஆம் திகதிக்கு முன்னரே தாம் பள்ளிவாசலை மூடிவிட்டதாகவும், இப்படி பள்ளிவாசல் மூடியிருக்கையில், எப்படி 13 ஆம் திகதியும் 20 ஆம் திகதியும் சம்மான்கோட்டை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகை நடந்திருக்க முடியுமெனவும் பள்ளிவாசல் நிர்வாகம் அததெரண நிர்வாகத்திடம் நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளது.

பள்ளிவாசலில் தொழுகை நடந்ததாக தமக்கு வேறு தரப்பினரே தகவல் தந்ததாகவும், அதனடிப்படையிலே தாம் சம்மான்கோட்டு பள்ளிவாசலில் தொழுகை நடந்ததாக செய்தி ஒளிபரப்பியதாக அததெரண
தெரிவித்துள்ளது.

எனினும் இது அப்பட்டமான பொய், ஊடக தர்மத்தை மீறும் செயல், அடிப்படை ஆதாரமற்று இந்த செய்தியை நீங்கள் ஒளிரப்பியுள்ளீர்கள் என சம்மான்கோட்டை பள்ளிவாசல் நிர்வாகம் அததெரண விடம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையடுத்து எதிர்காலத்தில் இதுபோன்ற விவகாரங்கள் குறித்து தாம் மிகுந்த விழிப்புடன் இருப்பதாக, அததெரண நிர்வாகத்தினரால் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு வாக்குறுதி வழங்கப்பட்டதாக அறிய வருகிறது.

இவ்விவகாரத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும், அதிக அவதானத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.