மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.

யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது.

யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று (31) கனடாவின், ஒன்றாரியோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஸ்ரீலங்கா இராணுத்தில் கடமையாற்றிய சுனில் ரத்நாயக்க என்னும் இராணுவ உறுப்பினர் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் 3 சிறுவர்கள் உட்பட 8 தமிழ் பொது மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்தார் என்னும் குற்றத்திற்காக மேற்படி குற்றவாளிக்கு 2015 ம் ஆண்டு கொழும்பு உச்ச நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.சாதாரண பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சட்டவிரோத படுகொலைகள் போன்ற பாரதூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது மற்றும் விடுதலை செய்வது ஆகிவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டையே நாம் கொண்டிருக்கிறோம். அத்தகைய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பை ஈடுசெய்வதற்கு எதிரானதாகும்.

ஏற்கனவே 2009ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தால் திட்டமிட்டு அரங்கெற்றப்பட்ட இனப்படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணைகள் இன்னமும் முற்றுப்பெறாத நிலையிலும், ஜ.நா சபையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட முன்னாள் இராணுவ உயர் அதிகாரிகள் மீதும் தொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இன்னமும் உரிய முறையில் பொறுப்புக்கூறாமல் காலத்தை இழுத்தடிக்கும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 30/1 இருந்து அரசாங்கம் விலகியது மற்றும் ​​தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட ஒரூ இராணுவ வீரர் மன்னிக்கப்பட்டுள்ளார்.குற்றவாளியான சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ உறுப்பினரை விடுதலை செய்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக உலக நாடுகள் போராடிவருகின்ற நிலையில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது, குறிப்பாக வெறுக்கத்தக்கது. சர்வதேச குற்றவியல் நீதிக்கான ஒரு செயல்முறையை அமைப்பதற்கான நடவடிக்கைகளையாவது குறைந்தபட்சம் எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் . இலங்கை அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். நானும், கனடாவிலுள்ள சக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள நீதிக்காக தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றவர்களுடன் இணைந்து குரல் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.