#சீனாவா,#அமெரிக்காவா,#ரஷ்யாவா,அல்லது #இலுமினாட்டிகளா! அல்லது இவர்களில் எவருமே இல்லையா?

உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவத்தின் தளபதியும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளரும் ...
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது ஏன் எதனால்!

இன்று பிரித்தானிய பிரதமரும் வீட்டுக்குள் அனாதரவாக முடக்கப்பட்டுள்ளார்.இது ஏன் எதனால்!

இன்று, உலகின் மிகப்பெரிய கேசினோ கிளப்பான அனைத்து லாஸ் வேகாஸ் ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன. இது ஏன் எதனால்!

 இன்று, வருடத்துக்கு சுமார் 10 பில்லியன் டாலர்களை வருமானமாகப் பெரும்
ஆம்ஸ்டர்டாமின் விபச்சார வீதிகள் மற்றும் பார்கள், கால வரையின்றி இழுத்து மூடப்பட்டுள்ளன. இது ஏன் எதனால்!

 இன்று உலகின் அனைத்து நாடுகளும் அரச அங்கிகாரத்துடன் இயங்கிய நிர்வாண கிளப்புகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், இரவு விடுதிகள், பார்கள் மற்றும் பல உணவகங்களை மூடப்பட்டு விட்டன அதுவும் கால காலவரையின்றி,இது ஏன் எதனால்!

 இன்றைய வரலாற்றில்  கண்டம் விட்டு கண்டம் பாயும் பல்லாயிரக் கணக்கான இராட்ச விமானங்கள் தரையில் படுத்துறங்குகின்றன, இது ஏன் எதனால்?

வட்டி விகிதமும் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று உலக போலிஸ்காரன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்
 ஆக வட்டி ஒழிப்புக்கு காரணமாக இருந்தது, இது ஏன் எதனால்!

 ரஷ்ய நாட்டு அதிபர் புடினும் சிரியா நாட்டின் அதிபரான பஸாரும் கலந்துரையாடி, சிரியாவில் போரை நிறுத்தி விட்டனர்.!இது ஏன் எதனால்!

எகிப்திய உளவுத்துறையின் தலைவரும், இன்னும் இரு பெரிய அதிகாரிகளும் தனிமைப்படுத்தலுக்குள்ளாகி, பின்னர் மரணித்திருந்தனர் .இது ஏன் எதனால்!.

 உலகில் ஆணவமாய் சுற்றித் திரிந்த அறைகுறை நிர்வாண பெண்கள் கூட்டமெல்லாம்,  உடல் முழுதையும் சேர்த்து முகத்தையும் மூடிக் கொண்டு வீட்டுக்குள் அடங்கிப் போய் உள்ளனரே!இது ஏன் எதனால்!

 கடந்த இரண்டு வாரங்களில் பங்குச் சந்தை இழந்த மொத்த தொகை,16 டிரில்லியன் டொலர்கள் . இதுவும்தான் ஏன் எதனால்!

தம்மால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என கொக்கரித்த உலகையாளும் ஜாம்பவான்கள் எங்கே! எங்களால் தான் எல்லாம்,எங்களால் மட்டும்தான் முடியும் என கூப்பாடு போட்டவர்களெல்லாம் எங்கே?

 எங்கே,எங்கே?!   கடவுளே இல்லை என வியாக்கீனங்கள் கூறும் நாத்திகர்கள் எங்கே:

நான்தான் பாட்ஷா,நான்தான் ராஜா என கும்மாளமிட்டவர்களும் எங்கே:நாங்களும் முஸ்லிம்கள்தான் என கூறிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்த நயவஞ்சகர்கள்தான்  எங்கே;

துருப்பிடித்த இறும்புகளாக எல்லோரது குரல்களும்  மங்கலாகி விட்டன,கரகரத்து விட்டன.

 உலகமெனும் பூமி  தனது பொறுமையை மீறியதால் அதனது இறைவனிடம் முறையிட்ட விளைவு தான் மனிதனுக்கு ஏற்பட்ட இந்த வினை,

இதற்கெல்லாம் யார் காரணமென பலரும் பலவாறான கருத்துக்களையும் மனித அரசர்களையும் குற்றம் சுமத்துகின்றனரா?

 எல்லா வைத்தியர்களும் இன்று யாரை கையேந்துகின்றார்களோ!
அவன்தான் இதற்கெல்லாம் காரணம் என உணர்ந்து கொள்ளுங்கள்.!

யார் இன்றைய அரசனோ அவன்தான் இதற்கெல்லாம்  காரணம் என தெரிந்து பூட்டுக்கான சாவியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

 இதோ!அந்த சூத்திரதாரி இப்படி கூறுகிறான்:

“நாம் நாடினால், அவர்களுடைய கழுத்துக்கள் பணிந்து குனிந்து வரும்படி செய்யக் கூடிய அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்.

இன்னும், அர்ரஹ்மானிடமிருந்து புதிய நினைவுறுத்தல் வரும்போதெல்லாம், அதனை அவர்கள் புறக்கணிக்காமலிருப்பதில்லை.
எம்மிடமிருந்து  புதிதான யாதொரு உபதேசமும் அதனை அவர்கள் நிராகரித்து புறக்கணிக்கின்றவர்களாக இருந்தே தவிர வருவதில்லை.

(அல் குர்ஆன்-26:4,5)

படித்தது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.