64 Best Peace Of Mind Quotes And Sayings



அன்பின் பெற்றோர்களே!
நண்பர்களே!
சகோதர, சகோதரிகளே!

நாம் கொரோனா பற்றி கேட்டுத் தெரிந்ததும் தேடித் தெரிந்ததும் தெரிய வைத்ததும் ஏராளம், தாராளம்.
அதுபற்றி இன்னும் தேடுவதும் தெரிவதும் மனதிற்கு அவ்வளவு ஆகாது.
ஒரு கசப்பான, கலக்கமான விடயத்தை அடிக்கடி கதைப்பதும் அதுபற்றி தெரிந்துகொள்ள முயற்சிப்பதும் மன ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக அமையலாம்.
மனம் ஒன்றையே அதிகமாக உள்வாங்கும் போது, அதைப்பற்றி எண்ணும் போது அதனால் ஏற்படும் பாதிப்பு எங்கள் உள்ளத்தை மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடலாம்.
அவசரமாகவே தொற்றுக்களால் அவதிப்படலாம்.
சிறு பிள்ளைகள் இருந்தால் அவர்கள் எம்மைவிட இருமடங்கு பாதிக்கப்படலாம்.

செடிகொடிகளில், மரம் மட்டைகளில் பல வித்தியாசங்கள் இருப்பது போன்று அவை பல நிறப்பூக்கள், பலவகை கண்ணுக்கினிய, நாவுக்குச் சுவையான காய்கணிகளை தருவது போன்று, இனிமையான, இதமான எண்ணங்கள் எங்கள் மனதிலும் பூக்கவேண்டும். பூக்க வைக்கவும் வேண்டும்.
எதுவுமே தெரியாத மரம் செடிகொடிகளால் பூக்களை, காய்கணிகளை, பல நிறங்களை தர முடியுமானால் ஏன் எங்களால் அழகான, புதுமையான, வளமான எண்ணங்களை தரமுடியாது. இவ்வாறான எண்ணங்கள்தான் எங்கள் மனதை தைரியப்படுத்துகின்றன. எங்கள் உடலை பலப்படுத்துகின்றன. தைரியமாக எதிர்த்து நிற்கும் ஆற்றலை தருகின்றன.

கோரோனா கோரோனா என்றும் கேர்பியு கேர்பியு என்றும் சொல்லிச் சொல்லிக் காலத்தைக் கடத்தாமல்…
அன்றாட வேலைகள் மீது அவதானம் செலுத்துவோம்
இருப்பதை ஆசையோடு சமைப்போம்
அழகாக சாப்பிடுவோம்
சிறித்துப் பேசுவோம்
கதைகள் சொல்லுவோம்
குடும்பமாகச் சேர்ந்து விளையாடுவோம்
வாசிப்போம்
வீட்டுக்குள்ளேயே வகுப்புகள் நடத்துவோம்
ஒழுக்கத்தை உருவாக்குவோம்
அல்குர்ஆனின் சில பாகங்களை மனனம் இடுவோம்
பிள்ளைகளுக்கு வாழக் காட்டிக்கொடுப்போம்
இறைவனை ஒன்றாக பிரார்த்திப்போம்

குடும்ப உறவை வளர்க்க, அன்பை இன்னும் அழகுபடுத்த, பொறுமையை படிக்க, சிக்கனம் பேன இதை நல்ல வாய்ப்பு நிரைந்த சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்வோம்.


அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.