கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இலங்கையில் சில ஊர்கள் முடக்கம்....!!!

Rihmy Hakeem
By -
0


கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கண்டி, அக்குரணை பகுதியில் உள்ள ஒரு ஊர் முடக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளம் கடையன் குளம் பகுதியில் உள்ள மக்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இப்பகுதிகளில் இனங்காணப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் புத்தளம் பகுதியில் கொரோனா தடுப்பு முகாம் ஒன்றை நிறுவி அப்பகுதியில் உள்ள 118 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)