இந்த பதற்றமான காலத்தில் 
வீட்டோடு இருக்கும் 
கணவனுக்கும் மனைவிக்கும்…

-- புனிதமான திருமணங்கள் -- 
        -----------------------
திருமணம் தொழில் போன்றது
நுட்பங்கள், அர்பணங்கள்
தொழிலை வளர்க்கிறது 
ஒத்த குணங்கள், புதிய புரிதல்கள்
வெற்றிபெற்ற திருமணத்தை
மண்ணில் மனக்கச்செய்கிது

கலப்படம் இல்லாத காதல்
வெற்றியடைந்த
திருமணத்தில் நிரம்பியிருக்கும்
வாழும் இடத்தை விட
வாழும் விதமே
அவர்களுக்கு அமைதி தரும்
உணர்வை புரிந்து
உறவை வளர்த்து
வாழும் கணவன் மனைவி
ஓருவரில் ஒருவராயிருப்பார்கள்
அவர்கள் பிள்ளைகள்
குடும்பத்தை அழகுபடுத்துவார்கள்
சமூகத்தை பலப்படுத்துவார்கள்

ஆரோக்கியமான குடும்பத்தின் ஆரம்பம்
சிறந்த கலாச்சாரத்தின் ஆரம்பம்
நல்ல சிந்தனையின் ஆரம்பம்
தூய அறிவின் ஆரம்பம்
தூய்மையான ஆன்மீகத்தின் ஆரம்பம்
பாதுகாப்பின் ஆரம்பம்
அன்பு - அரவணைப்பின் ஆரம்பம்
மதிப்பு - புரிந்துணர்வின் ஆரம்பம்
ஒருமைப்பாட்டின் ஆரம்பம்
எல்லாமே
நல்ல கணவன் மனைவியின்
சுகமான இணைப்பிலிருந்தே
மலரும் மனம் வீசும்

ஒன்றுபட்ட கணவன் மனைவியின் உள்ளம்
குழந்தைகளின் முதல் பாதுகாப்பிடம்
அதுதான் அவர்களின் முதலாவது புகழிடம்
அதுதான் முதல் அறிவு தரும் பள்ளிக்கூடம்
அதுதான் சந்தோசம் தரும் பூங்காவனம்
வாழ்வின் ஆரம்ப அனுபவங்களை
சுகமாக அனுபவிக்கும் அமைதி மடம்

இறைவனின் சட்டத்தால்
ஆண் பெண் எனும் மனித உறவால்
உருவான
கணவன் மனைவி எனும்
புனிதம் நிரைந்த பாத்திரங்களை
பக்குவமாய் பாதுகாக்கப்போம்…!
பண்பும் பாசமும் நிரைந்த
உயர்வான
உத்தமர்களை 
உலகிற்கு
அன்பளிப்புச்செய்வோம்.
===================

அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.