Image result for doctors

உயிரை பணயம் வைத்து
உறக்கத்தை தியாகம் செய்து
 உறவுகளை பிரிந்து
ரா பகல் பாராமல்
கண்விளித்து பல கஷ்டங்களை தாங்கி
உன்னத சேவை புரியும் உத்தம வைத்தியர்களே !
தன் இன்பம் மறந்து பிறரின் துன்பம் நீங்க மனமுவந்து பாடுபடும் நல் உள்ளம் கொண்ட அன்பின் வைத்தியர்களே !
 நீங்களும் ஒரு பெற்றோரின் பிள்ளைகளைகளே
நீங்களும் பல பிள்ளைகளைகளின் தாய்மார்களே ! தந்தைமார்களே !
இத்தனை உறவுகளும் உள்ள ஒர் மனிதனே நீங்களும் !
அத்தனை உறவுகளையும் கவனிக்காது இன்று யாரோ எவர் எவரையோ தன் சொந்த உறவுகள் போல் மதித்து உபசரிக்கின்றீர்களே !
 பல கோடி மக்கள் நிம்மதியாய் வாழ உங்கள் சுகத்தை
உங்கள் நேரத்தை
உங்கள் குடும்பத்தை
அனைத்தையும் தியாகம் செய்த உன்னத சேவை புரியும் உத்தம வைத்தியர்களே!
உங்கள் சேவை
     என்றும் உயர்ந்து உலகெங்கும் மக்கள் நிம்மதியாய் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம் ஏக இறைவனிடம்
    யா அல்லாஹ்.....  யா ரஹ்மான்....
   இக்கோடிய வேதனையை விட்டும் சோதனையை விட்டும் நம் அனைவரையும் பாதுகாப்பாயாக
வைத்திய சேவை புரியும் வைத்தியர்களுக்கு ஆரோக்கியத்தையும் சுகத்தையும் கொடுப்பாயாக ...
ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்

வைத்திய சேவை வாழ்க பல்லாண்டு

பாத்திமா ஷர்மிலா பின்து  முஹம்மது நூஃமான்
ஆலிமா முஅஸ்கரிய்யா கஹடோவிட்ட

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.