அஸ்மின் (நிந்தவூர்)

இலங்கை இன்று கொரோனாவால் முதலாவது மரணத்தை சந்தித்திருக்கிறது இன்னும் எத்தனை விழப்போகிறது என்று எமக்கு தெரியாது.

உலகம் பூராக ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையில் நம் நாட்டிலும் ஏற்பட்டுள்ளதால் அரசாங்கம், வைத்தியத்துறை, பாதுகாப்பு பிரிவினர் என்று நிறையப்பேர் நாமக்காக இரவு பகலாக தங்களின் நேரத்தை செலவழித்து நம்மை பாதுகாக்க எவ்வளவோ முயற்சி எடுக்கின்றனர்.

இதுவரையில் இந்த கொரோனா வைரசிற்காக எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை அதனால் தான் இந்நோய் அதிகமாக பரவி விடக்கூடாது என்பதற்காக உங்களை தத்தமது வீடுகளுக்குள் இருக்குமாறு உத்தரவு பிறப்பித்து நம் நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்துள்ளனர் தேவையற்ற விடையங்களுக்கு வெளியிறங்க வேண்டாம் என்று.

ஆனால் நம்மவர்கள் வீதி எங்கும் குறுக்க மறுக்க ஓடி பாதுகாப்பு படையினரை அவமதித்து விளையாடி திரிக்கின்றனர்.. இன்னும் சிலருக்கு எவ்வளவு சொல்லியும் விளங்குதில்லை., ஒரு வைத்தியர் சொல்கிறார் இன்று மட்டும் வைத்தியசாலைக்கு தேமல் மருந்து எடுக்க, பூச்சி குளிசை எடுக்க, கடுப்புக்கு மசாஜ் + சூடு பிடிக்க, ஒரு நாள் இருமல் தடுமல், என 100ற்கும் மேல் வந்தார்கள் என்று., மிக மிக அவசர வைத்திய தேவைக்கு மட்டுமே வைத்தியசாலை போகச் சொன்னால் இப்படியெல்லாம் மடத்தனமாக நடக்கின்றார்கள்.

தற்போது இலங்கையில் 113 ஆக இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐ தாண்டினால் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நான் இருக்கும் நாட்டில் தேவையற்ற விடையங்களுக்கு வைத்தியசாலைப்பக்கம் போனாலோ தேவையில்லாமல் வீதிகளில் கூடி நின்றாலோ வாகனங்களில் மூண்று பேருக்கு மேல் சென்றாலோ உங்களுக்கு (fine) தண்டம் அடிப்பார்கள் அந்த வகையில் நீங்கள் அதிஷ்டசாலிகள், நாம் நல்ல ஒரு நாட்டில் வாழ்கிறோம் நாட்டையும் நாட்டு மக்களையும் தயவு செய்து நாசம் பண்ணிவிட வேண்டாம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.