கட்டுநாயக்க ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் பணியாற்றுவோரில் இதுவரையில் வீடு திரும்ப முடியாமல் இருந்தவர்களை தமது வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது.
விடுதிகளில் தங்கியிருந்தவர்களுக்கு இந்த ஏற்பாடு குறித்து கடுநாநாயக்க பொலிசார் நேற்று இரவு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி அறிவித்தனர்.
இதனையடுத்து கட்டுநாயக்க ஏற்றுமதி தயாரிப்பு வலயத்திற்குள் பணியாற்றுவோரில் பலர் தமது வீடுகளுக்கு செல்வதற்காக இன்று அதிகாலை வந்திருந்தனர் .
இலங்கை முதலீட்டு சபை, கட்டுநாயக்க பொலிசார், பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள், ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலை உரிமையாளர்கள் இராணுவத்தினர் ஆகியோர் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

