பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் நிதியொதுக்கீடு

Rihmy Hakeem
By -
0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நாளாந்தம் கூலித் தொழில் செய்கின்ற தற்போது வீடுகளில் முடங்கிக் கிடக்கும் வசதியற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் முதற் கட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதன் மூலம் கல்முனை மக்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கான நிதியை, கல்முனை பொதுப்பணி மன்ற தலைவர் அமீர் மற்றும் செயலாளர் சர்ஜூன் ஆகியோரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் மாவடிப்பள்ளி மக்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கான நிதி, மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழக உறுப்பினர்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)