ஊரடங்கு உத்தரவானது,


  • கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்படும்.

  • புத்தளம், யாழ்ப்பாணம், முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் (27) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டு மீண்டும் நண்பகல் 12.00 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

  • ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவானது (26) வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் நண்பகல் 12.00 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தை விட்டு மாவட்டம் யாரும் செல்ல முடியாது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இடத்துக்கு இடம் அழைத்துச் செல்லுதல் முற்றிலும் தடை.
ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்திலும் விவசாயிகள், சிறு தேயிலை தோட்ட மற்றும் ஏற்றுமதி உப உணவுப் பயிர் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஊடக சேவைகளுக்கும், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்திற்கும்.
 பயணிகள் விமான நிலையம் மற்றும் துறைமுக சேவைகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
 இந்த நடவடிக்கைகளை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும் என்று விவசாய மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.