இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 65 ஆகும். இவர்களில் 78 வீதமானோர் ஆண்கள் என்பதுடன், 67 வீதமானோர் 40 வயதினை தாண்டியவர்கள் ஆவர்.

மேலும், இலங்கையில் பிரான்ஸை சேர்ந்த ஒருவரும் இந்தியர் ஒருவரும் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 17 பேர் மற்றும் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.