இன்று (30/03/2020) இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இடம்பெற்ற ஷைக் யூஸுப் முப்தி அவர்களது தனிமைப்படுத்தல் அனுபவப் பகிர்வின் போது கூறியவற்றின் சாராம்சம்

உண்மையில் இந்நாடு தனிமைப்படுத்துவற்காக செய்யும் முயற்சிகள், சேவைகள் மற்றும் மக்களை கொடிய கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்காக எடுத்துள்ள திட்டமிடல்களை பாராட்டி தனது அனுபவத்தைப் பகிர்ந்த பின் முஸ்லிம்களாகிய நாம் இயக்கவெறிகளைத் தவிர்த்து நாட்டு சட்டத்திற்கு வழிப்படுமாறு வேண்டிக்கொண்டார்.

ஏதோவொரு தலைமைக்கு கட்டுப்படுவது எமது கடமை, குறிப்பாக வாலிபர்கள் நாட்டு சட்டத்திற்கு கட்டுப்படாத போது குடும்பப் பொறுப்பாளர்கள் அவர்களுக்கு அறிவுரை செய்து வலியுறுத்த முயற்சிப்பது கடமை, அவ்வாறும் கேட்காது கட்டுக்கடங்காதவர்களை பொலிசாரிடம் முறையிட்டு காட்டிக்கொடுப்பது நாம் நாட்டுக்கு செய்யும் கடமை என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

அத்தோடு இத்தருணத்தில் வறியவர்களுக்கு உலர் உணவு வழங்கி வழங்கிய சகோதரர்களைப் பாராட்டியதோடு, தேவைக்கேற்றளவு உதவிகளை பெற வேண்டுமே தவிர சேமித்து வைக்கும் நொக்கில் அளவுக்கதிகமாக பொய்யுரைத்து உதவி பெறுவதும், எல்லை மீறி செயற்படுவது நரகத்திற்கு இட்டுச்செல்லும்.

வாழ்க்கையில் சேமிப்பும் தேவை, மற்றவரிடம் கை நீட்டும் எண்ணத்தையும் இயன்றளவு தவிர்த்து சுய கௌரவத்தைப் பேணி வாழவும் பழகிக்கொள்ள வேண்டும். கொடுப்பவர்களும் கொடுக்க முன்வருவதுடன், கேட்பவர்கள் கேட்டுக் கொண்டிருப்பதையும் வாழ்விலிருந்து களைய முனைய வேண்டும்.

தொடர்ந்து, நாட்டுக்கு விசுவாசமாக இருப்பது மாத்திரமல்லாது அதன் இறைமையை பாதுகாப்பதும் கடமையாகும் ஏனெனில் இந்நாடு எமக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவ வசதிகள் மேலும் இன்னோரன்ன சலுகைகளை வழங்கியுள்ளது. ஆதலால் ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புடன் நடப்பது கடையாகும் என்பன போன்ற பயன்தரும் எண்ணற்ற விடயங்களை வேண்டிக்கொண்டதோடு ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களது பட்டாளம் வருவதைக் கண்ட எறும்பு தனது ஏனைய எறும்புகளுக்கு "ادخلوا مساكنكم" நீங்கள் (பாதுகாப்புக்காக) உங்களது வீடுகளுக்குச் சென்றுவிடுங்கள் என்று பணித்து வழிகாட்டிய அழகிய மேற்கொளுடன் விடயத்தை புரியவைத்து தனது உரையாடலை முடித்துக்கொண்டார்.

தொகுப்பு:
அஸ்(z)ஹான் ஹனீபா 
30/03/2020

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.