கொரோனாவால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதி ஆகியவற்றிக்கு தலா 25 லட்சம் ரூபாயை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வழங்கியுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்கள்இ விளையாட்டு வீரர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில்இ இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோருக்கு உதவும் வகையில் பிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 50 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.

முன்னணி விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் எனப்பலரும் மத்தியஇ மாநில அரசுகளின் நிவாரணப் பணிகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.