தீரா உலா

Image result for fight with coronaஇலங்கையரசு கொரோனா நச்சுயிரை மட்டுப்டுப்படுத்தி இல்லாதொழிக்கும் நோக்கொடு அவசரகாலச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி  ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.என்னறிவுக்கெட்டியவரை சிறந்த தற்காப்பு முயற்சி என்பேன். ஆனாலும் நெடிய ஊரடங்கு உத்தரவென்பது ஒரு வகைச் சிறையென்றே மனது வலிக்கிறது.

உளவியல் ரீதியில் COVID19 நச்சுயிரின் தாக்கம் நிச்சயம் இருக்குமென்பதில் ஐயமில்லை. தெஹிவலையிலிருக்கும் விலங்கினமாக உருமாறியிருப்பது  போவும் திறந்தவெளிச் சிறையில் அல்லல்படும் பலஸ்தீனியனைப் போலும் கண் முன்னால்  எண்ணவோட்டம் வருகிறது.  சமூக ஊடகங்களைப் பார்க்குமிடத்து அங்கும் இவ்வாறான நி லை.. ஜேர்மனியர் அனேகர் உப்பரிகையில் வயலின் இணைத்தவண்ணமிலுப்பதைக் காணொலிகளில் கண்டேன். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் (Apartments) தொடர்மாடி வீடுகளிலிருந்தவாறு ஒன்றாய்ச்சேர்ந்து “சுமிஹிரிபாணே” என்ற பாட்டைப் பாடுவது வலைதளங்களில் வைரலாகியிருக்கின்றன. வகுப்பு  நண்பனிடம் கேட்டபோது “மெனேஜர விட மனைவி கூடுதலா வேல வாங்குறாள் ஒபீஸ் பரவால்டா” என்றான்.

உண்மையில் மனிதன் சமூகப் பிராணி. குறிஞ்சியிலும் முல்லையிலும் நாடோடிகளாயே யிருந்தான். என்னளவில் அதன் தொடர்ச்சிதான் உல்லாசப் பிரயாணிகள். முதலையின் எச்சம்தான் சுவரில் பல்லியாக என்ற கவிதையை நினைவு கூர்கிறேன். ஏதோவொரு புறக்காரணி மனிதனை “கொலம்பஸ்” ஆகவும் “வாஸ்கொடகாமா” ஆகவும் மாற்றுகிறது. ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்கள்கொலம்பஸ்,வஸ்கொடகாமாவின் DNA தொடர்ச்சிதானோ என எண்ணிச் சிரித்துக் கொள்கிறேன். மரபனு பரிசோதனை செய்தால் உறுதிப்படுத்தலாம். எனவே மனிதன் வீட்டில் அடைந்திருப்பதென்பது ஒருவகைச்சிறை.

சிறையும் ஒருவகைத் தண்டனைதான். அதனால்தான் குற்றம்புரிந்தவர்களை பொலிஸார் சிறையிலடைக்கின்றனர். வளிமண்டலத்தை மாணுபடுத்தியதற்காய், மரங்களையும் மண்வளங்களையும் அழித்துவருவதற்காய்,நீர்நிலைகளிலே கழிவுகளைக் கலந்தத்தற்காய் இயற்கையின் தீர்ப்பில் குற்றவாளிகளாக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறோமோ எனவும் எண்ணியிருக்கிறேன். இவ்வாறெல்லாம் பலவாறு எண்ணிணும் அல்லாஹ் அனுமதியின்றி அனுவும் அசையாது;அவன் கொடுப்பதைத் தடுப்போர் எவருமில்லை அவன் தடுப்பதைக் கொடுப்போர் எவரும் இல்லை என்பது என் திட நம்பிக்கை. என என் கட்டுரைக்கு முற்றுப்புள்ளியிட முற்பட்டபோது  நண்பனிடமிருந்து கோல் என கைப்பேசி அலறியது.


“சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” என்றான்” அவ்வாறே தாங்கள் மீதும்”என்றேன். ஸ்டீபன் விஞ்ஞானம் கற்ற நாஸ்திகன் எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த நண்பன். நீண்ட நேரம் பேசினேன்

பூமியும் ஓர் உயிரி. அது தன்னைத்தானே சமநிலைப் படுத்திக் கொள்கிறது. பூமியின் ஓட்டத்திற்குத் தெரிவு செய்யப் பட்டதுதான் மனித இனம். பரிணாம வளர்ச்சியின் பல படிகளைக் கடந்து வந்த மனிதவினம் தனக்கு ஊறு விளைவிப்பதாய் எண்ணியதோ என்னவோ வைரஸ் குடும்பங்களி லொன்றை பரிணாமமடையச் செய்து  மனிதவினத்தொடு போர் தொடுத்து தன் சமநிலையைத் தக்க வைக்க முயல்கிறதோ வென்னவோ. எப்போதெல்லாம் பூமி,தானிட்ட வரம்பை உயிரினங்கள் மீறுகிறதோ அப்போது அவ்வினத்தை அழிக்க பூமி முற்பட்டதைப் பார்க்கிறோம். “டைனோசர்” ,பூமி தன் சமநிலை பேண அழித்த உயிரினம். எனவே இது மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். மனித இனம் முற்றும் அழிந்தால் “அமீபா, பரமீசியம் என முதலிலிருந்து வருவதற்குள் பூமி அழிந்து விடும். இருப்பதைக் காப்பதே சமயோசிதம். வீட்டில் அடங்கிருப்பதே நச்சுயிர் தொற்றாமலிருப்பதற்கான தற்காப்பு.  வீட்டிலடங்கியிருப்பதும் ஒருவகை மனநோயையுண்டுபண்ணும். மனிதன்சமுகப் பிராணி. ஓடுபவைகள் தான் ஆறு. வரலாறு நெடுக மனிதன்  ஓடிக் கொண்டேதானிருந்தான். நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன் உழவைக் கண்டறிந்ததன் பின் “இருத்தலைக்” கையாண்டான். இருத்தல்தான்  மனிதனை மாற்றியமைத்தது;நாகரிகம் தோற்றம் பெற்றது; காட்டாறு  வாழ்க்கையைக் கட்டிப்போட்டு சிந்தனை மாற்றம் கண்டது, இதுவரை இல்லாதிருந்த மதம் என்ற மடமை கண்டுபிடிக்கப் பட்டது என அடுக்கிக் கொண்டே போகலாம். இவைதாம் அவன் சொன்னது. நண்பன் ஸ்டீபன் சொன்னதைத் தமிழ்ப்படுத்தி கவிதைமுலாம் பூசினால் இவ்வாறுதானிருக்கும்.

கஹட்டோவிட்ட சிபான்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.