கண்டி – அக்குரணை தெலம்புகஹவத்த பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து, குறித்த பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், குறித்த நபருடன் தொடர்புகளை பேணி வந்தவர்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு பிரிவினரும் சுகாதாரப் பிரிவினரும் இந்த விசேட செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(Tamil mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.