ஆக்கம் : sajidh safwan
தொடர் : 01

கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு தயாரிப்பையும், விநியோகத்தையும், கோலாகல கொண்டாட்டங்களையும், கியூபா முழுவதும் காணமுடிகிறது. ஒவ்வொரு அருகமைப் பகுதி (Neighbor hood) குடியிருப்புகளிலும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இடம் பெறுகிறது. புரட்சி குறித்து அறிந்த முதியவர் முதல் வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள் வரை அனைவரும் பங்கேற்பதாக இருக்கிறது.

தென் அமெரிக்காவின் இன்றைய இடதுசாரிகள் தலைமையில் ஆட்சியமைப்பிற்கும், அரசியல் மாற்றங்களுக்கும், சின்னஞ்சிறிய கியூபா அக்னிக் குஞ்சாக இருந்து, பற்றி எரியும், அரசியல் ஈர்ப்பைக் கொண்டதாக வளர்ந்து வருகிறது.

கியூபா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம், “பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெறாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்த கியூபாவைத் தனிமைப் படுத்துவது என்ற கொள்கையின் தோல்வியை, அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்”, என்று கூறுகிறது. இப்படி மதிப்பீடு செய்ய காரணமாக, இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன.

1. அமெரிக்கா கியூபாவுடன் தனது அரசு முறை உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என அறிவித்தது.
2. 17 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க சிறையில், உளவாளிகள் என குற்றம் சுமத்தி, வேண்டுமென்றே சிறையில் அடைக்கப் பட்டிருந்த 5 கியூபர்களை அமெரிக்க அரசு விடுதலை

மேற்படி இரண்டு நிகழ்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான நிர்பந்தம் காரணமாக உருவானது. குறிப்பாக அமெரிக்காவிற்கு நெருக்கமாக அமைந்துள்ள, தென் அமெரிக்க நாடுகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகும். தென் அமெரிக்க நாடுகள் பற்றியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. ”ஹியுகோ சாவேஸ் மரணத்தால் ஏற்பட்ட பின்னடைவைக் கடந்து, வெனிசுவேலா மற்றும் இதர தென் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களும், நவீன தாராளமயம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்குச் சவால் விடுத்து, தமது மாற்றுப்பாதையில் முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன” என்பது தீர்மானத்தின் முக்கிய வரிகள். கியூபாவுடன் அமெரிக்கா தனது உறவை புதுப்பித்துக் கொள்ள முன் வந்தது, இந்தப் பின்னணியில் தான் எனத் தீர்மானம் சுட்டுகிறது. மேலும் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அளித்த குரல், கியூபா தனிமைப் படுத்தப்படக் கூடாது என்பதாகவே இருக்கிறது. அமெரிக்காவால் அதைப் புறக்கணிக்க முடியவில்லை, என தீர்மானம் மதிப்பீடு செய்கிறது.

இது கியூபா மீதான மனிதாபிமான உணர்வு என்பது மட்டுமல்ல. கியூபாவின் அரசியல் மீதான நாட்டமும், கியூபா பின்பற்றி வரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள், மீதான ஈர்ப்பும் இணைந்த ஒன்று ஆகும்.

தொடரும் ...........................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.