கொவிட்-19 தொற்று அதிக அபாய மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளையில் அதிகளவான மக்கள் வெளியில் சென்றமையே இதற்குக் காரணம்.

ஆகவே மறு அறிவித்தல்வரை குறித்த பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இக்காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு நேரடியாக வீடுகளுக்குக் கொண்டு சென்று விநியோகிப்பதற்கு சதொச, லாஃப்ஸ், ஆர்பிகோ, புட் சிட்டி, அரலிய, நிபுண, கீல்ஸ் ஆகிய விற்பனை நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.