இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டதை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
சதொச நிறுவனத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை பெரிய வெங்காயம் கிடைத்திருப்பதாக சதொச நிறைவேற்று அதிகாரி துஸ்மந்த கொடவத்த தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 150 ரூபாவிற்கு சதொச நிறுவனம் விற்பனை செய்கின்றது. அத்தோடு குறைந்த விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.