கொவிட் 19 தாக்கம் இலங்கையில் மிக மோசமாகப் பரவும் சாத்தியம் அதிகம் என்பது துறைசார்ந்தோரின் கருத்து. மருத்துவர்கள் விடுக்கும் எச்சரிக்கைக்கு அமைய நாட்டு மக்கள் அதன் seriousnessஐ தமக்குள் எடுத்துக்கொண்டார்களா என்பது சந்தேகமே.
கொரோனா தாக்கம் இலங்கையில் ஏற்பட்டு ஒரு சில நாட்களில் திஹாரி ஹஸனிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் உஸ்தாத் ரிழா மஃதுாமி அவர்களின் சகோதரர் உஸ்தாத் மஸீன் அல் மஃதூமி அவர்கள் முகநூல் வீடியோ ஊடாக முக்கியமான ஒரு செய்தியை வழங்கினார்.
தனிப்பட்ட ரீதியிலும் கூட்டாகவும் குனூத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹழரமௌத்தைச் சேர்ந்த இமாம் அப்துல்லாஹ் பின் அலவி அல் ஹத்தாத் அவர்கள் தொகுத்த " ராதீப் அல் ஹத்தாதை" ஒதி வருமாறும் அறிவுரை வழங்கினார்.
எமது முன்னோர்கள் , குறிப்பாக இவ்வாறான தொற்று நோய்கள் அதிகரிக்கும் வேளையில் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றதோடு, ஸதகா உணவளித்தல் குர்பானி போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் முடியுமான அளவு வுழுஉடன் இருந்துகொள்ளுமாறு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.
ரசூல் (ﷺ) பொருட்டால் வல்ல நாயன் நம்மைப் பாதுகாப்பான் என்பதோடு, இறைவன் ஷாபி என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆன்மீக ரீதியிலும் எம்மை வலுவூட்டிக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்பது அறிஞர்களின் நிலைப்பாடாகும். 

நன்றி : பஸ்ஹான் நவாஸ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.