மீண்டும் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு!

நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரங்கு உத்தரவு விதிகளை முறையாக கடைபிடிக்குமாறு அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது

இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்,. நாட்டில் மிக பாரிய சுகாதார சவாலாக கொரோனா தொற்று பரவுவதினாலாயே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள செயலணி செயற்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலத்தில் வெளியே செல்ல வேண்டாம் என அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட வாகனங்கள் மாத்திரமே இந்த காலப்பகுதியில் பயணிக்க முடியும் இதனால் பொலிஸாரும் முப்படையினரும் ஊரடங்கு சட்ட விதிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நன்றி : அததேரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.