வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றுமொரு குழுவினர் இன்று தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

132 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களுள் 76 பேர் தியத்தலாவ கொரோனா தடுப்பு முகாமிலிருந்து ஏனைய 56 பேரும் பூனானி கொரோனா தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி சென்றுள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 1565 பேர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 41 கொரோனா தடுப்பு முகாம்களில் மேலும் 2096 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர்களில் 20 பேர் வெளிநாட்டு பிரஜைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.