பொது மக்கள் கூடும் இடங்களில் மக்கள் நடந்து கொள்ளும் முறை பற்றிய தெளிவூட்டலுக்காகவும் , ஊரடங்கு சட்டம் அமுலாக இருப்பதன் காரணமாக ஏறாவூர் பொதுச்சந்தையை அண்டிய பகுதிகளில் அதிகமான மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையில் காணப்படுவதனால் அவர்களை விழிப்பூட்டுவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் ஏறாவூர் சந்தை வியாபாரிகளுக்கும் , பொதுமக்களுக்கும் முகக்கவசங்கள் இன்று விநியோகம் செய்யப்பட்டன.

இதன்போது அங்கிருந்த மக்களுக்கு கொரோனா வைரஸ் இன் தாக்கம் , பொதுமக்கள் நடந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விழிப்பூட்டப்பட்டதுடன், சன நடமாட்டத்தை மட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழுமையாக கட்டுப்பட்டு நோயின் தாக்கத்தில் இருந்து எம்மவரையும் , எம் அயலவரையும் பாதுகாப்போம் எனும் தொனிப் பொருளில் குறித்த விழிப்பூட்டல் மற்றும் முகக்கவச விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.